வடக்கு – கிழக்கில் தேர்தல் நடத்தக் கூடாது – அனுரகுமார
29 Dec,2019
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்தால், வடக்கு -கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது என்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார்.
”சிறிலங்கா அதிபரின் எதிர்கால கொள்கைகள் குறித்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்துமாறு நாங்கள் சபாநாயகரிடம் கோருவோம்.
மேலும் 2020 ஜனவரி 3 ஆம் நாளுக்குப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டங்களை ஒத்திவைக்க வேண்டாம் என்று அதிபர் ராஜபக்கவிடம் கேட்டுக்கொள்கிறோம். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.