முன்னாள் இராணுவத் தளபதி குடும்பத்துடன் டுபாய் பயணம்
28 Dec,2019
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான மஹேஸ் சேனாநாயக்க தனது குடும்ப சகிதம் டுபாய் நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு டுபாயிலுள்ள அமெரிக்க நிறுவனமொன்றில் முன்னர் செய்த அதே தொழில் மீண்டும் கிடைத்துள்ளதாக டுபாய் தகவல் வட்டாரங்களை ஆதாரம் காட்டி இன்றைய சகோதர மொழி நாளிதழொன்று அறிவித்துள்ளது.
இவர்கள் டுபாய் நோக்கி குடும்பத்துடன் சென்றுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்திய அரசாங்கம் விடுத்த முன்னறிவிப்பு குறித்த எச்சரிக்கை அறிவிப்பு, இராணுவத்துக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.