தெற்கு அதிவேக வீதியில் விபத்து ; 3 இந்தியர்கள் உள்ளிட்ட நால்வர் பலி, இருவர் காயம்
23 Dec,2019
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன - குறுந்துகஹஹெத்தெம்ம பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 3 இந்தியர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வேன் ஒன்று கொள்கலன் வாகனத்துடன் மோதியதினாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இவ் விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.