விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததை சில நாடுகள் விரும்பவில்லை – மஹிந்த
22 Dec,2019
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை இலங்கை முடித்ததில் சில நாடுகள் மகிழ்ச்சியடையவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்.
“உலகின் மிக இரக்கமற்ற பயங்கரவாதக் குழுவை இராணுவத்தால் தோற்கடிக்க முடிந்தது .இதனால் உலகில் உள்ள படைகளுக்கு இலங்கை ராணுவத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு .”
“இருப்பினும், இலங்கை போரை முடித்ததில் சில நாடுகள் மகிழ்ச்சியடையவில்லை”. “ஆனால் அரசியல்வாதிகள் என்ன சொன்னாலும் அந்த நாடுகளில் உள்ள இராணுவம் எங்கள் இராணுவத்தைப் பற்றி நேர்மையான கருத்தைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இன்று தியத்லாவையில் நடைபெற்ற இராணுவத்தின் அணிவகுப்பில் கலந்துகொண்டு இராணுவத்தினரின் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்