முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது!
18 Dec,2019
முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க நேற்றுமாலை கொழும்பு குற்றப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் சங்தீப் சம்பத் என்ற இளைஞரை விபத்துக்குள்ளாக்கி பலத்த காயமடைய செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சம்பி;க்க ரணவக்கவை கைது செய்யுமாறு கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமையவே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்