சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் அமெரிக்கா?
14 Dec,2019
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் அமெரிக்கா செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கை வதிவிடப்பிரதிநிதி தமாரா குணநாயகம் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
நிஷாந்த டி சில்வா சுவிஸிற்கு தப்பிச் சென்றமை தொடர்பான அவதானத்தை திசை திருப்பும் நோக்கிலே குறித்த கடத்தல் நாடகம் அரகேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இராணுவ தேவைக்காக இலங்கையை பயன்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், இலங்கையிலிருந்து சீனா, பாகிஸ்தான், ஈரான், ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்த முடியும் எனவும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கை வதிவிடப்பிரதிநிதி தமாரா குணநாயகம் தெரிவித்துள்ளார்