பாதுகாப்பு செயலருக்கு எதிராக 100 பக்க மனித உரிமைமீறல் குற்ற அறிக்கை
12 Dec,2019
!
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருக்கிறார்
என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களைப் பட்டியலிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெயர்ந்தவர்கள் மீதான தகுதிவாய்ந்த அதிகாரமுடைய 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகவும், சித்திரவதைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஜோசப் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகவும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரின் பங்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி அவர் பற்றிய 100 பக்க அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது