மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள்!
17 Nov,2019
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் புதிதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியை கொண்டாடும் முகமாக கல்முனை பகுதியில் வர்த்தக நிலையங்களை மூடியதை காணமுடிந்தது.
அத்துடன் இன்றைய தினம் பிரதான வீதியில் இராணுவ சோதனை சாவடிகள் திடிரென அமைக்கபட்டு சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினரும் பொலிஸாராரும் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நாட்டின் 7ஆவது தலைவரை தேர்ந்தெடுக்கும் சனாதிபதி தேர்தலை முன்னிட்டு இராணுவத்தினர் முன்னர் அமைத்திருந்த சாவடிகளிலிருந்து மீள அழைக்கப்பட்டு முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்று மீண்டும் புதிய சோதனை சாவடிகள் உருவாக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுததப்பட்டு சோதனை நடவடிக்கைகள் அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புதிதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியை கொண்டாடும் முகமாக கல்முனை பகுதியில் வர்த்தக நிலையங்களை மூடியதை காணமுடிந்தது.
அத்துடன் இன்று பிரதான வீதியில் இராணுவ சோதனை சாவடிகள் திடிரென அமைக்கபட்டு சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினரும் பொலிஸாராரும் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நாட்டின் 7ஆவது தலைவரை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இராணுவத்தினர் முன்னர் அமைத்திருந்த சாவடிகளிலிருந்து மீள அழைக்கப்பட்டு முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று மீண்டும் புதிய சோதனை சாவடிகள் உருவாக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுததப்பட்டு சோதனை நடவடிக்கைகள் அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.