சோதனைச் சாவடிகள் இருப்பதாக கூறப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு – இராணுவ தளபதி
16 Nov,2019
வடக்கில் வீதிகளில் சோதனைச் சாவடிகள் இருப்பதாக கூறப்படும் வதந்திகள் தவறானவை என்றும் அவை ஆதாரமற்றவை என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தற்போது மும்முரமாக இடம்பெறுவரும் நிலையில் வாக்காளர்களின் அச்சத்தைப்போக்க சோதனைச்சாவடிகள் நீக்கப்பட்டதாக இராணுவத்தளபதி இன்று காலை அறிவித்திருந்தார்.
இருப்பினும் வடக்கில் எந்தவொரு சோதனைச் சாவடிகளும் அகற்றப்படவில்லை என போலியான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவந்த நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்காளர்களின் நன்மைக்காக பாலாலி – பளை வரை உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளும் எடுக்கப்பட்டுள்ளன என இராணுவ தளபதி கூறினார்.