பிரபாகரனுக்கு நான் ஜனாதிபதியாகவிருந்த போது 42 கடிதங்கள் எழுதினேன் ; யாழில் சந்திரிக்கா
11 Nov,2019
யாழ்ப்பாணத்தில் மக்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக இன்று விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணம் வந்திருந்த அவர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மக்களை சந்தித்ததுடன் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
இதன் போது தாம் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எவ்வாறான பணிகளை மேற்கொண்டேன்.குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களுக்கு எவ்வாறான பணிகளை செய்தென் என்பதை விளக்கி உரையாற்றினார்.
அப்போது தாம் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்து பத்து நாட்களிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சேருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.மேலும் அவர்களுக்கு நான் ஆட்சியில் இருந்த காலத்தில் 42 கடிதங்கள் எழுதியிருந்தேன்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சேருடன் சமாதான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தேன்.
மேலும் எமது நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்த போது கூட நாம் அவர்களுடன் இணைந்து மக்களை மீட்டு அத்தியாவசிய உதவிகளை வாங்கியிருந்தேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சேருடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவர் தாம்தான் வடக்கின் அரசன் தமிழீழத்தை அடைந்தே தீருவேன் என கூறினார் அதனாலேயே நாம் இறுதியில் போரை ஆரமிக்க வேண்டியிருந்தது.என்றார்