8000 ஏக்கர் நிலங்களை அமெரிக்காவுக்கு விற்ற மகிந்த அரசு – அனுரகுமார குற்றச்சாட்டு
10 Nov,2019
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 8000 ஏக்கர் காணிகள், அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
அனுராதபுரவில் நேற்று முன்தினம் தேர்தல் பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
‘அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்பாட்டுக்கு எதிராக இருப்பது போன்று பாசாங்கு செய்யும் மகிந்த ராஜபக்ச, சோமாவதியவில் 5,000 ஏக்கர் நிலத்தையும், பெல்வத்தையில் 2000 ஏக்கர் நிலத்தையும், இகினிமிட்டியாவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தையும் அமெரிக்க நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தவர்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ச, கடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, கற்பிட்டியில் உள்ள 14 தீவுகளை விற்பதற்குத் திட்டமிட்டிருந்தார்.
அவற்றில் இரண்டு தீவுகள், இந்திய மற்றும் டென்மார்க் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.