படையினர் பொதுமக்களைக் கொன்றதற்கான ஆதாரங்கள் இல்லை – ராஜித
26 Oct,2019
இலங்கை படையினர் போரின்போது வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றனர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “போரின்போது இலங்கை இராணுவம் பொதுமக்களை குறிவைத்து தாக்கியதாக குற்றம்சாட்டிய தருஸ்மன் குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
படையினர் வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றதை நிரூபிக்க, அரசாங்கத்திடம் ஆதாரங்கள் இல்லை.
மோதல்களுக்கிடையில் அகப்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதை பொதுமக்கள் நேரடியாக இலக்கு வைக்கப்பட்டனர் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என அவர் மேலும் கூறினார்.