இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்
22 Oct,2019
இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினமாகும். எனவே நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் பெருமலவில் இனவாத மோதல்கள் ஏற்பட்டன. அதன் போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பாரிய சேவையாற்றியுள்ளார். அந்த சேவையை ஒருநாளும் எம்மால் மறக்க முடியாது. எனவே சஜித் அரசாங்கத்தில் அவர் பாதுகாப்பு அமைச்சராக செயற்படடுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.