தீவிரவாதி சஹ்ரானுடன் ஹக்கீம் பேசும் காணொளியை சிக்கியது!
18 Oct,2019
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடும் வகையிலான காணொளியொன்று வெளியாகியுள்ளது.
ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவரே சஹ்ரான்.
இவருடன் பல அரசியல் தலைவர்கள் உரையாடியமை, சந்தித்தமை போன்ற பல புகைப்படங்கள், காணொளிகள் வெள்வந்த வண்ணம் இருந்தன.
முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, அமைச்சர் ரிசாட் போன்றவர்கள் சஹ்ரானை சந்தித்தமை, அவருடன் இருப்பது போன்ற புகைப்படங்களால் பல சர்ச்சைகள் எழுந்திருந்தன.
தற்போது அவை ஒருபுறமிருக்க அமைச்சர் ரவூப் ஹக்கீமும் சஹ்ரானை சந்தித்தது போன்ற காணொளி தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.