ஜனநாயகப் போராளிகள் கோட்டபாய ரகசிய சந்திப்பு- வெளியான புகைப்படம்
14 Oct,2019
சனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் இயங்கி வரும், தமிழீழ விடுதலைப் புலிகள், அமைப்பின் முன்னாள் போராளிகளை சிறியளவில் உள்ளடக்கிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் சனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவை, மிக இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இச்சந்திப்பு கடந்த வாரம் மிகவும் இரகசியமான இடமொன்றில் நடைபெற்றுள்ளது.
சனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களான துளசி,கதிர்,வேந்தன் மற்றும் கவியரசன், ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரே இச் சந்திப்பை நடத்தியுள்ளனர். இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள்,காணாமல் போதல் மற்றும் பாலியல் கொடுமைகளை அரங்கேற்றியது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்த-கோத்தபாய சகோதரர்களை சந்தித்து உறவாடியது தொடர்பில் முன்னாள் போராளிகளும், தமிழ் தேசிய உணர்வாளர்களும் தமது கடுமையான அருவருப்புடனான அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஜனயாக போராளிகள் கட்சியை கோட்டபாய தான் தொடங்கிவைத்துள்ளார் என்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில். இவர்கள் சந்திப்பானது இதனை முழுமையாக உறுதிசெய்வதாக அமைந்துள்ளது. பெரும் தொகைப் பணத்தை பெற்றுக்கொண்டு, கோட்டபாயவை ஆதரிக்க இவர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.