வெள்ளைவேன் கலாசாரத்தை மீள கொண்டு வருவதா? நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்"
29 Sep,2019
மீண்டும் சர்வாதிகார ஆட்சி, வெள்ளைவேன் கலாச்சாரம், ஜனநாயக உரிமை மீறள் உள்ளிட்ட கட்டமைப்பினை கொண்டு வருவதா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் தூர நோக்குடன் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் குறுகிய காலத்திற்குள் எந்த அரசாங்கத்திலும் நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய சுதந்திரத்தை வழங்க முடியாது.
ஜனாதிபதி தேர்தலை வெற்றிப்பெறுவதை தொடர்ந்து பொதுத்தேர்தலிலும் வெற்றிப் பெற்று சிறந்த அரசியல் கட்டமைப்பினை ஸ்தாபிக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து பலமான அரசாங்கத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும் என்றும் அவர் அவர் கூறினார்.
சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம் பெற்றது .
அங்கு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் தபர அமில தேரர்,அமைச்சர் ரவூப் ஹக்கீம்,பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி ஆகியோர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.