வவுனியாவில் இராணுவப்பயிற்சி என்ற போர்வையில் சோதனை'
20 Sep,2019
வவுனியா- மெனிக்காம் பகுதியில் இராணுவ பயிற்சி என்ற பெயரில் தங்கள் மீது கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் தங்களது இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) காலை வவுனியா- செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போர்காலத்தை நினைவூட்டுவதுபோல, பெருமளவான துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த இராணுவ குவிப்பு, பயிற்சி நடவடிக்கைக்காவே மேற்கொள்ளபட்டதாக இராணுவத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.