நீரில் மிதக்கும் கல் ஒன்று கண்டுபிடிப்பு
07 Sep,2019
மீகஹகிவுல தல்தென ஸ்ரீ போதிராஜாராம விகாரைக்கு அருகில் அமைந்துள்ள பதுலு ஓயாவில் இருந்து மிதக்கும் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 கிலோ கிராம் நிறையுடைய இந்த கல் விகாரையின் தேரர்கள் சிலரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டு பிடிக்கப்பட்ட கல்லை எடுத்து வந்து விகாரைக்கு அருகில் அமைந்துள்ள குட்டை ஒன்றில் தேரர்கள் போட்டுள்ள நிலையில் அந்த கல் மிதக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், நீரில் மிதக்கும் இந்த அற்புதமான கல்லை பார்வையிட பிரதேச மக்கள் இன்று காலை தொடக்கம் பெருமளவில் வருகை தருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
இந்த கல் எந்த வகையான கல் என்பது தொடர்பில் சரியாக தெரியாத நிலையில், கல் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு முழு ஆதரவையும் வழங்க தயாராக உள்ளதாக விகாரையின் விகாராதிபதி வண. தல்தென தம்மவங்ச தெரிவித்துள்ளார்.