தற்கெலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது!!
03 Sep,2019
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்ரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்டதை அடுத்து குறித்த உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தின் உத்திவின் கீழ் தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளது.
குண்டுதாரியின் தலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்டமை தொடர்பில் அப்பிரேதச மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்படிருந்தனர்.
அத்தோடு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மேற்கொண்டதோடு , ஆரப்பாட்டங்களை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையிலேயே இன்று சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.