பொன்சேகாவின் கருத்துக்கு சஜித் பதில்
15 Aug,2019
நாட்டில் இருக்கும் ஜனநாயக முறைமை காரணமாக எந்தவொரு நபருக்கும் எந்தவித கருத்தையும் தெரிவிக்க முடியும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் கிராமமட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் இதன்போது அனைத்து அமைப்புக்களையும் ஒன்றினைத்து அதற்கான திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.