சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற மூவர் அம்பாறையில் கைது
15 Aug,2019
இலங்கையில் தடைச்செய்யப்பட்ட அமைப்பான ஜமாஅத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த மூவரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மூவரும் பயங்கரவாதி சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.