வடக்கு- கிழக்கு மக்கள் கோட்டாபயவுக்கே ஆதரவு:
12 Aug,2019
வடக்கு- கிழக்கு மக்கள் கோட்டாபயவுக்கு தங்களது ஆதரவினை நிச்சயம் வழங்குவார்களென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட அவர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைவது உறுதி. அந்தவகையில் சிறுபான்மையினரும் அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குவார்களெனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாய அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய கட்சிகள் வெவ்வேறுப்பட்ட கருத்தை வெளியிட்டு வருகின்றன.
அந்தவகையில் கோட்டாபய ராஜபக்ஷவை இலகுவாக தோற்கடித்துவிடுவோமென ஐக்கிய தேசியக்கட்சி கூறியுள்ளது.
அதேபோன்று கோட்டாவை எதிர்த்து போட்டியிடக்கூடிய சிறந்த வேட்பாளர் தங்களிடம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு கட்சிகளும் வெவ்வேறுப்பட்ட கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றமையை தற்போது அவதானிக்க கூடியதாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.