கிளிநொச்சியில்புதையல் அகழ்வில் ஈடுபட்ட சிங்களவர்கள் பலர் கைது; !
01 Aug,2019
கிளிநொச்சியில் உள்ள மண்டைக்கல்லாறு பகுதியில் 2019 ஜூலை 28 அன்று புதையல் அகழ்வில் ஈடுபட்ட தென்பகுதியைச்சேர்ந்த ஐவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளதுடன் புதையல் அகழ்வுக்கு பயன்படுத்திய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மண்டகல்லாறு பகுதியில்ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்த குறித்த ஐவரும் கண்காணிக்கப்பட்டு அவர்கள் புதையல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது .பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவகள் 29, 34, 35, 47 மற்றும் 48 வயதுடைய அவிஸ்சாவெல மற்றும் பாதுக்க பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.