ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை 10 ஆம் திகதி வரை தேடுவேன் : மஹிந்த
21 Jul,2019
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சகல பிரேரணைகளையும் கவனத்தில் கொண்டு, எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரையில் தேடி 11 ஆம் திகதி தீர்மானத்தை அறிவிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
இன்று (20) மாலை கொழும்பு மஹவெலி மத்திய நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரை பலரும் பிரேரித்துள்ளனர். அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள். நாட்டு களநிலவரங்கள், மக்களின் எதிர்பார்ப்பு என்பவற்றை எல்லாம் கருத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.