எந்தப் பதவியில் உள்ளவர்களும் மகா சங்கத்தினரை அவமதிக்க முடியாது - ஜனாதிபதி
19 Jul,2019
எந்த பதவி நிலைகளில் உள்ளவர்களாயினும் மகாசங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் அதனை கடுமையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று பெலேந்த ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாது கோபுரம், நூல் நிலையம் மற்றும் சமய உரை மண்டபம் ஆகியவற்றை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும் சிறந்ததொரு நாட்டையும் சமூ கத்தையும் கட்டியெழுப்ப முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று பிற்பகல் பெலேந்த ரஜ மகாவிகாரைக்குச் சென்ற ஜனாதிபதி முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
பெலேந்த ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய தேவமுல்லே கல் யாண ஸ்ரீவங்ச நாயக்க தேரருக்கு ஜனாதிபதியினால் நினைவுப் பரிசொன்று வழங்கிவைக்கப்பட்டதுடன், தேரரினால் ஜனாதிபதிக்கும் நினைவுப்பரிசொன்று வழங்கிவைக்கப்பட்டது.
இரண்டு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரும் அமைச்சர் மங்கள
வண. தினியாவல பாலித தேரரால் முன்வைக்கப்பட்ட பொய்யான கருத்துகளுக்கு பாரிய பிரசாரத்தை பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் இரண்டு தனியார் தொலைக்காட்சிகளிடம் தலா ஒரு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.