அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி
11 Jul,2019
மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்டு இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகின.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.