சேருவில திருகோணமலையில் ஆயுதங்கள் மீட்பு
04 Jul,2019
திருகோணமலை சேருவில கந்தளாய் பிரதான வீதியில் களு பாலமருகில் சில ஆயுதங்களை இன்று(3) பொலிஸ் விசேட அதிரடைப்படையினர் கண்டு பிடித்துள்ளனர்.
இதில் டி 56 துப்பாக்கி தோட்டாக்கள் 2292, எல் எ ஜி,எம்9,டி 56 துப்பாக்கிகள் போன்றனவும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடைப்படையினர் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலே இப்பொருட்களை கண்டு பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கைப்பற்றிய ஆயுதங்கள் சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.