விபத்தில் மூன்று பெண்கள் பலி!
30 Jun,2019
அனுராதபுரம் - தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.