மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குகிறார் மைத்திரி
28 Jun,2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, தமது கட்சியிலிருந்து வேட்பாளரொருவரைக் களமிறக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, மீண்டும் வேட்பாளராகக் களமிறங்குவாரென, வீரகுமார திசாநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார்.
நேற்று (26) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போதே, இது குறித்து ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டதென, அவர் கூறினார்