பல்வேறு குறறச்சாட்டுகளில் கைதாகி நீதிமன்றினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட 1261 பேர் நாட்டின் பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 36 பேர் பெண்களாவர்.
மரண தண்டனை விதிப்பட்டுள்ள 1261 பேரில் 297 பேர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களில் 823 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்படக் கூடிய கைதிகளான 438 பேரின் பெயர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.