மஹிந்த ராஜபக்ஷ ஒரு தோல்வியடைந்த ஆட்சியாளர்:தம்பர அமில தேரர்
28 Jun,2019
மஹிந்த ராஜபக்ஷ ஒரு தோல்வியுற்ற ஆட்சியாளர், எவ்வித விம்பமும் இல்லாத ஆட்சியாளர் என்று தம்பர அமில தேரர் கூறுகிறார்.சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தை செழிப்பாக கொண்டு செல்வது தொடர்பில் அ ஆ கூட தெரியாதவர் என்று அவர் கூறியுள்ளார்.இருந்த மல்டி பெரல்களில் தோட்டாக்களை நிரப்பி யுத்தம் செய்தது மாத்திரம் தான். அந்த மல்டி பெரல் தோட்டாக்களும் முன்னர் கொண்டு வந்தவை.
தோல்வியடைந்த அரசியல்வாதிகளின் ஒரே ஆயுதம் மதவாதமும் இனவாதமும் ஆகும் என்று தம்பர அமில தேரர் கூறுகிறார்.