இலங்கை மீதான பயண ஆலோசனையை நீக்கியது அமெரிக்கா
26 Jun,2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இலங்கை மீது விதித்திருந்த பயண ஆலோசனையை அமெரிக்கா நீக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அமெரிக்க அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் இலங்கையில் இருந்து வெளியேறுமாறு அறிவித்திருந்தது.
ஏற்கனவே அண்மையில் இலங்கை மீது அமெரிக்கா விதித்திருந்த பயணத்தடை நீக்கப்பட்டிருந்தது.தற்பொழுது இலங்கை மீதான பயண ஆலோசனை முன்னர் இருந்த Level 3 இல் இருந்து தற்பொழுது Level 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது