கொழும்பில் ரெயில் மோதி இலங்கை ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழப்பு
25 Jun,2019
,
கொழும்புவில் உள்ள கிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியில் கொழும்புவில் இருந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த ரெயில் ஒன்று ராணுவ வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கேட் பகுதி வேலை செய்யாத நிலையில், தண்டவாளத்தை கடக்க முயன்ற ராணுவ வாகனத்தின் மீது ரெயில் மோதி விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்த ராணுவத்தினரின் உடல்கள் ராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விபத்து குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.