ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுவதில் தமக்கு உடன்பாடில்லை
24 Jun,2019
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுவதில் தமக்கு உடன்பாடில்லை என அமைச்சர் ரவுப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். கண்டி – தலாதுஓய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்று கூறுவதில் ஐயம் இருக்கிறது.
தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் தொலைபேசியில் அழைத்து இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்குமாறு கூறிய பின்னரே இரண்டு நாட்கள் கழித்து இந்த தாக்குதலை தாங்கள் பொறுப்பேற்பதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிவித்தனர். அப்படி என்றால் யார் போன் பண்ணி ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சொன்னார்கள் ?
இதனையும் ரவூப் ஹக்கிம் தெரிவிக்கலாமேஸ ஐ.எஸ் தீவிரவாதிகளின் போன் நம்பரை கையில் வைத்திருக்கும் ஒருவர் தான் இதனை செய்ய முடியும். அது யார் என்று சொல்ல இந்த மூனா வுக்கு திறாணி இல்லை. இப்போது இதனை ஐ.எஸ் செய்யவில்லை என்கிறார். இதனை தான் நாம் முன்னரே சொல்லி இருந்தோம். ஆம் இது இலங்கை வாழ் மூனாவின் முல்லமாரி தனம் என்று. யார் கேட்டார்கள். இன்று புரிகிறதா ?