முஸ்லிம்கள் பல பெண்களை திருமணம் செய்வதை தடைசெய்வோம்!!- மஹிந்த ராஜபக்
24 Jun,2019
ஒருவர் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று மத ரீதியில் பகிரங்கமாக பின்பற்றப்படும் செயற்பாடுகள் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
பொதுச் சட்டத்திற்கு அனைத்து இனங்களும் கட்டுப்படுதல் அவசியம். எவரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.
ஆட்சி மாற்றத்தின் ஊடாக அனைத்தும் திருத்தியமைக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
கேகாலை நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற முஸ்லிம் மத சட்டங்கள் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
யீயபந-02ஞயபந1ஐஅயபந0003-உ2283ன63ய50னஉ3ய4284ய2ந36503யb1க49805ய1னb72 கன்னிகள் தேவையென்று ஒரு அடிப்படைவாதி கருதினால் நாம் அனைவரும் இறக்க நேரிடும். அடிப்படைவாதம் நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படும்.
மதத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுச் சட்டத்திற்கு அப்பால் சென்று எவரும் செயற்பட முடியாது.
பல பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதை முழுமையாக மாற்றியமைத்து அனைவரும் பொதுச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படு வார்கள்.
முஸ்லிம் மதத்தில் இளவயது திருமணம் பிள்ளைகளின் எதிர்காலத்தை இல்லாதொழித்துள்ளது. முரண்பாடுகள் ஏற்பட்டால் விவாக ரத்து பெற்றுக்கொள்வதும் ஆண்களுக்கு இலகுவாக காணப்படுகின்றது.
இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பொதுச் சட்டத்தில் விவாகரத்து பெறுவது இலகுவான காரியமல்ல. அனைத்து இனங்களும் பொதுச் சட்டத்தை பின்பற்றுவது கட்டாயமாக்கப்படும்.
நல்லாட்சி என்ற பெயரில் வாக்குறு திகளை மாத்திரம் அரச கொள்கையாக கொண்டு ஆட்சியமைத்த அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாக் கப்பட்டுள்ளன.
இன்னும் குறுகிய காலத் துக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும். அரசாங் கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு நாட்டு மக்களே தகுந்த பதிலடியை வழங்குவார்கள் என்றார்.