அரபு மொழிகளை அகற்ற முடியாது; போர்க்கொடி தூக்கியது காத்தான்குடி!
21 Jun,2019
அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வருமானால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்வதென காத்தான்குடி நகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது வரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை அவ்வாறு வருமானால் அதற்கெதிராக காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காத்தான்குடி நகர சபையின் 15வது மாதார்ந்த அமர்வு வியாழக்கிழமை இன்று
(20.06.2019) காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கடந்த மாதம் இடம் பெற்ற சபை அமர்வின் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு சபை ஏற்றுக் கொண்டதுடன் கடந்த மாதக் கணக்கறிக்கையும் வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த அமர்வின் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் கடந்த விஷேட அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானமான காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் சில இடங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழியை அகற்றக் கோரும் உத்தியோக பூர்வமான அறிவித்தலுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது என தீர்மானம் கலந்துரையாடப்பட்டு மீண்டும் அத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இது வரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை அவ்வாறு வருமானால் காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
அதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதிக்குப்பின்னர் நாட்டில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் பல் வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் சபையில் உரையாற்றிய தவிசாளர் அஸ்பர் குறிப்பிட்டார்