முகப்புத்தகத்தின் ஊடாக களியாட்ட நிகழ்வு : போதை மாத்திரைகளுடன் 51 பேர் கைது
17 Jun,2019
இரத்தினபுரி கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பலாங்கொட, பெலிஹுல்ஒய பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
நேற்று (16) மாலை 4.30 மணி அளவில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இந்த விசேட சோதனையை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையின் போது போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரிகைகள் வைத்திருந்தமை தொடர்பில் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வு ஒன்றின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது பிரகெப்லின் 20 மாத்திரைகள், 3 ஆப்பிள் மாத்திரை, 160 மில்லி கிராம் ஹெரோயின், 300 மில்லி கிராம் கொக்கெயின், 50 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 150 கிராம் கஞ்சாவை பொலிஸார்ர் மீட்டுள்ளனர்.