ஒரு முஸ்லீம் பிரபாகரன் உருவாகிவிடுவார்: இலங்கை அதிபர் எச்சரிக்கை
09 Jun,2019
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு பின் இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது பெரும் கவலையளிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது
இந்த நிலையில் இன்று முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற இலங்கை அதிபர் சிறிசேனா, அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'இலங்கை தற்போது ஒரு மதப்பிரிவினையால் சிக்கி தவித்து வருவது உண்மைதான். ஆனால் இது நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் நல்ல்தல்ல. அனைத்து சமுதாய மக்களும் இணைந்து ஒற்றுமையாக வாழாவிட்டால் ஒரு முஸ்லீம் பிரபாகரன் உருவாகுவதற்கு வாய்ப்பு கிடைத்துவிடும். அதற்கு நாம் அனுமதிக்ககூடாது
நாம் மதரீதியாக பிரிந்து நின்றால் ஒட்டுமொத்த நாட்டுக்குத்தான் இழப்பு. நாட்டை பற்றி கவலைப்படாமல் ஒருசிலர் மதப்பிரிவினையை தூண்டி அதில் குளிர்காய்கின்றனர். அத்தகையவர்களின் சதிச்செயலுக்கு மக்கள் இரையாகிவிட வேண்டாம்' என்று பேசினார்