ரத்தன தேரர் உண்ணாவிரத விவகாரம் | பின்னணியில் ஜனாதிபதியா?

09 Jun,2019
 

 

 
ரத்தன தேரர் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? முஸ்லிம் ஆளுனர்கள், அமைச்சர்கள் ஏன் தமது பதவிகளைத் துறந்தார்கள்? சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். மர்மம் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது போலிருக்கிறது.
அத்துரலிய ரத்தன தேரர் ஒரு புத்த பிக்கு, அரசியல்வாதி, பாராளுமன்ற அங்கத்தவர், ஜாதிக ஹெல உறுமய என்ற ஒரு சிங்கள தேசிய கட்சியின் முன்னணி உறுப்பினர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறீசேனவை ஜனாதிபதியாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். 2015 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப் பட்டியலில் பா.உ. ஆகத் தெரியப்பட்டவர்.
ஹிஸ்புல்லா, அசாத் சாலி, றிஷாத் பதியுதீன் ஆகியோர் பதவி விலக வேண்டுமென்று ரத்தன தேரர் உண்ணாவிரதமிருந்தார். இவர்கள் பதவி விலகாவிட்டால் ரத்தன தேரரின் உயிருக்கு ஆபத்து நேரும் அதன் விளைவாக நாட்டில் கலவரம் வெடிக்கும் எனக் கூறி ஞானசார தேரரும் ரத்தன தேரருக்காக வேண்டி மார்பை அடித்துக் கொள்கிறார். இந்த முஸ்லிம் தலைவர்கள் பதவி விலாகாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று ஞானசேரர் எச்சரிக்கிறார். இத்தனைக்கும் ஞானசேரருக்கு மன்னிப்பு வழங்கி சென்ற வாரம் தான் ஜனாதிபதி அவரை விடுதலை செய்திருந்தார்.
இப்பொழுது முஸ்லிம் தலைவர்கள் கூண்டோடு பதவி விலகப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். எதற்காக? யார் யாரைக் காப்பாற்றுவதற்காக அல்லது யார் யாரைப் பழிவாங்குவதற்காக இந்த நாடகம்?
மர்மம் இப்போதுதான் துலங்க ஆரம்பிக்கிறது. நடந்த, நடக்கின்ற சம்பவங்களின் கால அட்டவணையைப் பார்ப்பின் இந்தப் பொம்மையாட்டத்தின் பின்னணியில் மைத்திரிபால சிறீசேன தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் தலைநகர் வட்டாரங்களில் வலுவாக உருக்கொள்கிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சிறீசேன கடந்த சில நாட்களாகக் கூறிவருகிறார். நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள், இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்ககைகளைத் தகுந்த வேளையில் எடுக்கத் தவறிவிட்டார். நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் அக்கறையோடு செயற்படவில்லை எனப் பல குற்றச்சாட்டுகள் பல தரப்பினாலும் அவர்மீது குவிக்கப்பட்டௌ வருகின்றன. அவரது கட்சியான சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்வட்டாரங்களிலும் அவர் மீது அதிருப்தி நிலவுகிறது. சந்திரிகா பண்டாரநாயக்கா வேறொருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்ற நிலையில் சிறீசேன தன்னைச் சுற்றி ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார். இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி உடண்டியாகச் சிங்கள, பெளத்த தேசியவாதத்தை எடுப்பதனால் மட்டுமே தனக்குக் குறுகிய காலத்தில் ஆதரவைத் திரட்டலாம் என்று அவர் கருதியிருக்கிறார். அதைச் செய்யக்கூடிய ஒருவர் அத்துரலிய ரத்தன தேரர். உண்ணாவிரதத்துடன் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இச் சிங்கள பெளத்த தேசியவாதத்தின் மிகப்பெரிய ஊதுகுழல் ஞானசார தேரர். அவரையும் விடுதலை செய்தாகிவிட்டது.
முஸ்லிம் தலைவர்களைப் பதவியிறக்குவதற்காக ஏனிந்த நாடகம்? ஏன் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் ஏன் முடியவில்லை? அத்தனை பேரையும் ஒரே கிறுக்கலில் ஜனாதிபதி தூக்கியெறிந்து விட்டு சிங்கள பெளத்த தேசியவாத ஆதரவைத் தேடியிருக்க முடியாதா என்ற கேள்விகள் எழுகிறது தான்.
இல்லை. காரணம் இந்த ஆளுனர்களை நியமிக்கும் அதிகாரத்தை மட்டுமே அரசியலமைப்பு ஜானதிபதிக்கு வழங்குகிறது. பதவிகளைப் பறிக்கும் அதிகாரத்தை அது வழங்கவில்லை. நடைமுறையிலிருக்கும் மாகாணசபைகளின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமே ஆளுனர்களின் பதவிகள் பறிக்கப்படலாம். துரதிர்ஸ்ட வசமாக கிழக்கு, மேற்கு மாகாணசபைகள் ஏற்கெனவே கலைக்கப்பட்டுவிட்டன. எனவே ஆளுனர்கல் தாமகவே பதவி விலகினாலே தவிர வேறு வழியே இல்லை. இதை நன்றாகப் புரிந்த ஆளுனர்கள் இறுமாப்புடன் தமது பதவிகளில் ஒட்டிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பதவியிறக்கும் ஒரே வழி சிங்கள பெளத்த தேசியத்திடமே இருக்கிறது என்பதை ஜனாதிபதி சிறீசேனா புரிந்து கொண்டிருந்தார்.
எனவே இது அவர் அரங்கேற்றி நெறிப்படுத்திய நாடகம். அவரது பதவி ஆசையினால் உருவேற்றப்பட்ட நாடகம்.
Photo Credit: PMD News Lanka
இப்போது இரண்டு ஆளுனர்களும் பதவி விலகி விட்டார்கள். அமைச்சர் பதியுதீன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரப் போவதாக அச்சுறுத்தி அவரும் பதவி விலக ஒப்புதல் கொடுத்துவிட்டார். இவர்கள் பதவி விலகுவதால் முஸ்லிம் சமூகத்தினிடையே திடீர் தியாகிகளாகிவிடுவதைப் பொறுக்காத இதர முஸ்லிம் அரசியல்வாதிகளும் அமைச்சரவைப் பதவிகளிலிருந்து விலகுவதாகத் திட்டமிட்டுள்ளனர் (இவர்கள் தமது பா.உ. பதவிகளைத் துறக்கப்போவதாக்ச் சொல்லவில்லை).
ரத்தன தேரரும், ஞானசார தேரரும் தீக்குளிக்காமலேயே திடீர் புனிதர்களாகிவிட்டனர். ரத்தமின்றி சத்தமின்றி போரொன்று நடந்து முடிந்திருக்கிறது. எல்லோருக்கும் வெற்றி.
ஜனாதிபதி தேர்தலில் சிறீசேனவை ஆதரித்து சிங்கள பெளத்த தேசிய கும்பல்களைக் கொண்டு இந்த தேரர்கள் ஊர்வலம் வைப்பார்கள். மகிந்த தரப்பு தமது பங்கிற்கு இதர மகாசங்க அணிகளைச் சேர்த்துக்கொண்டு ஊர்வலம் போவார்கள். வழக்கம்போல ரணில் சதா தோற்றுப் போகும் ‘கார்ட்டூன்’ ரொம் (ரொம் அண்ட் ஜெறி) போல் ‘டொய்ங்’ என்று தலையடிபட்டு அறைக்குள் வெளிநாட்டுப் பிரதானிகளுடன் கலந்தாலோசிப்பார்.
Photo Credit: Colombo Page
நடந்தேறிய இந்த நாடகத்தில் இடையிடையே சில நகைச்சுவைக் காட்சிகளும் அரங்கேறின. இந்த இஸ்லாமிய பேரெதிர்ப்புவாதியான ஞானசேர தேரரை விடுதலை செய்யக்கோரிக் குரலெழுப்பியவர்களில் முக்கியமானவர்கள் ஹிஸ்புல்லாவும் அசாத் சாலியும். இன்னொரு காட்சியாக நமது சிங்கள கத்தோலிக்கர்களின் பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் தும் தன் பங்கிற்கு முஸ்லிம் தலைவர்களின் பதவி விலகல் கூச்சல்களுக்கு வலுச் சேர்த்த்தார்.
இது ஒரு முஸ்லிம் பிரச்சினை என்று சம்பவங்களுக்கு முடிச்சுப்போட்டால் தான் தனது ‘ஜனாதிபதிக்’ கனவை நிறைவேற்றலாம் என்று சிங்கள தேசியத்தை உடுக்கடித்து உருக்கொள்ள வைத்திருக்கிறார் சிறீசேன என்பதாகவே அனுமானிக்க முடிகிறது.
 
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா (பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறிப்பு), ஜே.ஆர்.ஜயவர்த்தனா (கண்டி யாத்திரை) வரிசையில் சிறீசேனவின் நாடகம்  இப்பொழுது தலதா மாளிகை முன்பதாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை தமிழர்கள் அரங்கத்தில் இல்லை என்பது சிலருக்குச் சிற்றின்பத்தைக் கொடுக்கலாம். தமிழர்கள் பார்வையாளர்கள் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது நிரந்தரமானதென்று கொண்டுவிட முடியாது. அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வொன்றைப் பெறமுடியுமென்ற பெரு நம்பிக்கையுடன் சிறு துன்பங்களையும் தாங்கிக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்ட சிறீசேன ‘நல்லாட்சியின் நாயகன்’ அல்ல என்பதை அக்டோபர் புரட்சி காட்டியிருந்தாலும் இந்த தடவை அவர் செயலாட்சி (manipulation) மன்னரான ராஜபக்சவையே தூக்கியடித்திருக்கிறார்.
நாடகம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. பதவி விலகல்கள் முடிந்த பிறகும் பழிவாங்கல் கோஷங்களின் அதிர்வு குறையவில்லை. தேரரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக கண்டியில் இன்னும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் வலுத்து வருகின்றன. தேரருக்கு அருகே நின்ற ‘அடையாளம் தெரியாத’ மூவர் முஸ்லிம்கள் எனக் கூறி சுற்றி நின்றவர்களினால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். வன்முறை மேகங்கள் சூல்கொள்வதை அவதானிக்க முடிகிறது. ஞானசேர தேரர் கொழும்பு நோக்கி ஊர்வலம் புறப்படுவதாக எச்சரிக்கிறார்.
இன்நிலையில் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு பரிதாபத்துக்குரியது. பழம் கனியும்போது பறவை கொத்திக்கொண்டு போவதைப் போன்று நம்பிக்கை தொடர்ந்தும் சிதைக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. பதவிகளைப் பெற்றிருந்தாலாவது இப்போது விலகிக்கொண்டு ‘தியாகி’களாகியிருக்கலாம்.
கொடுத்துவைக்காதவர்கள், வழக்கம்போலஸ

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies