ஞானசாரருக்கு நீக்கப்பட்டது வெளிநாட்டுப் பயண தடை; மைத்திரி அரசு !
08 Jun,2019
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடை உத்தரவு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதிபதி காஞ்சனா நெரஞ்ஜலா டி சில்வா இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடைஞ்சல் செய்தமை தொடர்பிலான வழக்கில் ஞானசார தேரருக்கு வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ஜப்பானில் நடைபெறும் செயலமர்வொன்றில் கலந்துகொள்ள செல்வதற்காக, தனது வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.