மஹிந்தவுக்கு ஆதரவு இல்லை : இளமையான புதிய முகம் ஒன்றுக்கே ஆதரவு
06 Jun,2019
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுடன் உரையாடும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கோ அவரது ஆதரவை வழங்க போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் இளமையான புதிய முகம் ஒன்று வந்தால், அவரை ஆதரிப்பதற்கு தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.