முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளைத் துறக்க தீர்மானம் ?
03 Jun,2019
அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு பதவிகளை துறக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்பதற்கான ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனக் கோரியும் அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் எனக் கோரியும் கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ( 31.05.2019 )உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்டு வருகின்றார்.
இந்நிலையிலேயே தற்போது நாட்டின் அரசியல் விவகாரம் சூடு பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது