முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
28 May,2019
தெல்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்ட மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்கவிற்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.
தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கலக சம்பவங்கள் தொடர்பாக மஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அமித் வீரசிங்கவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் கடந்த 15 ஆம் திகதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவரை இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றில் முல்லைப்படுத்திய போதே அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த வருடம், மார்ச் மாதமளவில் திகன, தெல்தெனிய முஸ்லிம் பிரதேசங்களில் கலவரத்தை ஏற்படுத்தி, வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் தீக்கிரையாக்கிய சம்பவங்கள் தொடர்பில் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதன் பின்னர் 7 மாதங்களின் பின்னர் அமித் வீரசிங்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.