வட்ஸ்அப் சமூக வலைத்தளத்தை நடாத்திய தர்கா நகர் இளைஞர்கள் 3 பேர் கைது
26 May,2019
“தர்கா டவுன் பிரேகிங் நியுஸ்” எனும் பெயரில் 100 உறுப்பினர்களுடன் நடாத்தப்பட்டு வந்த “வட்ஸ்அப்” சமூக ஊடகத்தின் உரிமையாளர் உட்பட மற்றுமிருவர் அடிப்படைவாத கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 20 இற்கும் 23 இற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சமூக ஊடகத்துடன் தொடர்புடைய 25 பேர் இன்று (26) அந்த ஊடகத்திலிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த வட்ஸ்அப் சமூக ஊடகத்தை கடந்த 3 வருட காலமாக நடாத்தி வரும் இளைஞர்கள் 23 வயதுடைய ஒருவர் எனவும், இவர் வெளிநாட்டில் சில காலம் வேலைபார்த்துவிட்டு வந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் 3 பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.