8 ஆயிரம் இலங்கை பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியர் கைது!
25 May,2019
இலங்கை சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்த வைத்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டில் குருணாகல் வைத்தியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
42 வயதான மருத்துவக்கல்லூரி வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி என்ற நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமாக முறையில் அவரிடம் சொத்துக்கள் உள்ளமை தொடர்பிலும், 8000 சிசேரியன் அறுவை சிகிச்சை செய்தமை தொடர்பிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைத்தியர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை 8000 சிசேரியன் சிகிச்சைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக டொக்டர் சிஹாப்டீன், குருணாகல் வைதியசாலையின் பணிப்பாளர் முன்னிலையில் ஒப்புக் கொண்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் செயற்படும் சர்வதேச ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.