சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, தூதுவர்களிடம் பிரதமர் கோரிக்கை
25 May,2019
இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தொடர்ந்ததான அச்சுறுத்தல் நிலைமை மாறி, நாடும் நாட்டு மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள நிலையில், இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு, வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தளர்த்துமாறும், பிரதமர் கோரினார்.
இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுடனான சந்திப்பொன்று, அலரி மாளிகையில், இன்று (24) இடம்பெற்றது. இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு கோரினார்.