ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குகிறார் ஜனாதிபதி?
20 May,2019
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ள அவரை விடுதலை செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை ஜனாதிபதி கோரியுள்ளதாகவும் அவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வெசாக் தினத்தை முன்னிட்டு 762 சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வொன்று வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அச்சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருடனும் நீண்ட நேரம் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் ஞானசார தேரரின் விடுதலை குறித்து பேசப்பட்டிருக்கலாமென கூறப்படுகின்றது.
மேலும் ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி எதிர்வரும் 25ஆம் திகதி பின்னர் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.