2015 ஆம் ஆண்டே இலங்கையில் கால்பதித்த ஐ.எஸ். அமைப்பு; வெளியாகியுள்ள செய்தி!
19 May,2019
ஐ.எஸ் அமைப்பு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இலங்கையில் தனது முதல் அடியை வைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பை அடிப்படையாக கொண்டு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இஷாக் அஹமட் மொஹமட் என்பவர் ஓமானுக்கு சென்று துருக்கி ஊடாக சிரியா சென்றுள்ளார். அங்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இலங்கை தலைவராக இணைந்துள்ளார்.
அபு ஹம்சா செய்லானி என அந்த அமைப்பினால் அவருக்கு பெயரிடப்பட்டது. குடும்ப உறுப்பினர்களுடன் சிரியா சென்று மதத்துக்காக உயிர்த் தியாகம் செய்ய வேண்டும் என்பதே அவரது எண்ணமாகும்.
இஷாக்கின் சகோதரர் நிலாம் (அபு சுனயீர் செய்லானி) உட்பட குடும்பத்தின் 38 பேர் அந்த வருடமே சிரியா சென்றடைந்துள்ளனர்.
குடும்பத்துடன் உயிர்த் தியாயம் செய்ய வேண்டும் என்பதே இவர்களதும் நோக்கமாகும். இந்த குடும்பத்தினர் சிரியாவில் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபடும் போது இலங்கையில் பயங்கரவாதம் தலை தூக்க ஆரம்பமாகியுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
கிரீஸ் பூதத்தின் பின்னணியில் யார்? ஸ்ரீலங்கா படைத்தரப்பின் புதிய கண்டுபிடிப்பு!
இலங்கையர்களை அச்சுறுத்திய கிரீஸ் பூதத்தின் பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளே இருந்தார்கள் என பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளதாக புலனாய்வு பிரிவினை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது.
கிரீஸ் பூதம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் புலனாய்வு வேலையை ஆரம்பிக்கும் போதே பயங்கரவாதி சஹ்ரானின் எழுச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
புதிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது இராணுவத்தின் பயங்கரவாத சோதனை தொடர்பான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
புலனாய்வு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமையால், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு அது சாதகமாக மாறியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் செயற்பாடுகள் குறித்து தெரியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.