ஐ.தே.க. ஆதரவு இல்லை, சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும்
15 May,2019
அமைச்சர் ரிஸாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், உத்தியோகபுர்வ அறிவிப்புக்கள் எதுவும் நேற்று வரை வரவில்லையெனவும், அவ்வாறு கிடைத்தால் கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் தயாசிறி எம்.பி. இதனைக் கூறினார்.
கூட்டு எதிர்க் கட்சியின் அரசியல் இலாபத்தை நோக்காகக் கொண்டு முன்வைக்கப்படத் தயாராகவுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்க மாட்டாது என அக்கட்சியின் பின்னாசன எம்.பி. யான ஹேசா விதானகே தெரிவித்தார்.
வெறுமனே குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எந்தவித ஆதாரங்களும் இன்றி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கு எதிராக கொண்டு வரும் இந்த பிரேரணை அரசியல் நோக்கம் கொண்டது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.