இலங்கையில் விமானங்களை தாக்கும் 85 குண்டுகள் மீட்பு;
14 May,2019
வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிசாரினால் சொப்பர் விமானங்களைத்தாக்கும் 85 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிசாருக்குக்கிடைத்த இரகசியத்தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை அலகல்ல அளுத்கம பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் சொப்பர் விமானங்களைத்தாக்கும் 85 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதியில் மேலும் குண்டுகளைத்தேடி விஷேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்